» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பா.ஜனதா பற்றி கருத்து சொல்ல நிர்வாகிகளுக்கு தடை: அ.தி.மு.க. தலைமை உத்தரவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:08:58 AM (IST)

கூட்டணியை விட்டு விலகிய நிலையில், பா.ஜனதா பற்றி கருத்து சொல்ல அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தடை விதித்து கட்சி தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பா.ஜனதா உடனான கூட்டணியை அ.தி.மு.க. நேற்று முன்தினம் முறித்துக்கொண்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திலேயே கட்சி நிர்வாகிகளுக்கு சில வாய்மொழி உத்தரவும் போடப்பட்டுள்ளது. அதாவது, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள், ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறுயாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டோ அல்லது பொது வெளியிலோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா உடனான மோதல் உச்சத்தை எட்டிய நிலையில்தான் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு பிறகும் பா.ஜனதா கட்சி குறித்தோ, அக்கட்சி தலைவர்கள் குறித்தோ கருத்து தெரிவித்தால், அது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது.
ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பா.ஜனதா தலைவர்களை கோபம் அடையச் செய்தது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த சில கருத்துகளும் அ.தி.மு.க. நிர்வாகிகளை எரிச்சல் அடைய செய்தது.
இதுபோன்ற வார்த்தைப்போர் இறுதியில், கூட்டணியில் பிளவை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில்தான், பா.ஜனதா குறித்து கருத்து தெரிவிக்க அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










