» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயிலில் அடிபட்டு தந்தை-குழந்தை பலி : விபத்தா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!!

சனி 1, ஏப்ரல் 2023 11:26:53 AM (IST)

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5 வயது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை அருகே மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவில் 2 பேர் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர். இதுெதாடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகரை சேர்ந்தவர் சிவா என்ற உச்சிமாகாளி (32). கட்டிட தொழிலாளி. இவருடைய 5 வயது குழந்தை முத்துசெல்வன்.

நேற்று இரவு சிவா தனது குழந்தை முத்துசெல்வனை அழைத்துக்கொண்டு அன்னைநகர் ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள தனக்கு ெசாந்தமான இடத்தை பார்க்க சென்றார். அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சிவா, குழந்தை முத்துசெல்வன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானது தெரியவந்தது.

எனினும் அவர் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுதொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory