» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விபத்தில் எஸ்.ஐ., போலீஸ்காரர் இறந்த வழக்கு: வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை!

புதன் 22, மார்ச் 2023 7:56:59 AM (IST)

வீரவநல்லூர் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் இறந்த வழக்கில் வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக தங்கபாண்டியன் பணியாற்றி வந்தார். புளியங்குடி போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் போலீஸ்காரராக இருந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு நெல்லையில் இருந்து அம்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வீரவநல்லூர் அருகேயுள்ள தனியார் ஆலை அருகில் வந்தபோது, அவர்களது மோட்டார் சைக்கிளும், சேரன்மாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் வேலியார்குளம் பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டி (50) ஓட்டி வந்த வேனும் மோதிக் கொண்டன. 

இந்த விபத்தில் தங்கபாண்டியன், மாரியப்பன் ஆகியோர் இறந்தனர். இதுதொடர்பான வழக்கு சேரன்மாதேவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ராஜலிங்கம் விசாரித்து, வேன் டிரைவர் கருத்தபாண்டிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory