» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!

செவ்வாய் 21, மார்ச் 2023 5:11:51 PM (IST)

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதனால் பெண்வீட்டாருக்கு ஜெகன் மேல் கோபம் இருந்துள்ளது. இன்று(மார்ச் 21) மதியம் கே.ஆர்.பி., அணை அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஜெகன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஜெகனை அவர் மனைவி சரண்யாவின் தந்தை தரப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து நடுரோட்டில் வெட்டி கொன்றனர். சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கத்தியுடன் பைக்கில் தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.. சரோஜ்குமார் தாக்கூர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.


மக்கள் கருத்து

பொண்ணுMar 21, 2023 - 05:33:20 PM | Posted IP 162.1*****

முழியே சரி இல்லை... நாடக காதல் வலையில் விழுந்து இருக்கிறாள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory