» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து: நாகேந்திரன் விளக்கம்

சனி 18, மார்ச் 2023 3:35:13 PM (IST)

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை - அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (மார்ச் 17) நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்தை பகிர்ந்திருந்தார். "தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்துப் போட்டியிட்டது இல்லை. கூட்டணி வைத்துதான் போட்டியிட்டு உள்ளனர். தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவிக்க முடியாது. கருத்து கூற, கேள்வி கேட்க, பதில் கூற அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது" என அவர் கூறினார்.


மக்கள் கருத்து

LOTUSMar 18, 2023 - 04:24:47 PM | Posted IP 162.1*****

பூனை குட்டி வெளியே வந்து விட்டது...இவர் சசி குரூப் ஆதரவாளர்..... திராவிட வாசனை ....அண்ணாமலை இன்றி அணுவும் அசையாது.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory