» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் அணி பட்டியல் நிராகரிப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 4:45:08 PM (IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி அணி அளித்த பட்டியலை மட்டுமே தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது. ஓபிஎஸ் அணியினர் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக சார்பில் முதலில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு அணியினரும் தங்கள் தரப்பில் பிரசாரம் செய்யும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திடீரென ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தங்கள் அணி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இந்தலையில்தான் தேர்தல் ஆணையம் நட்சத்திர வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி எடப்பாடி அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் என 40 பேர் கொண்ட பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஓ.பன்னீர் செல்வமோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால், அந்த செலவு முழுவதும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் உள்ளிட்ட யாரும் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திங்கள் 19, மே 2025 5:36:50 PM (IST)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!
திங்கள் 19, மே 2025 5:11:25 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு!
திங்கள் 19, மே 2025 4:03:34 PM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)

கர்ப்பிணி தாய்மார்களுக்கான கவனிப்பு பிரிவுகள் : அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
திங்கள் 19, மே 2025 12:54:24 PM (IST)

குளியலறையில் ரகசிய கேமரா: இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ கைது!
திங்கள் 19, மே 2025 12:43:02 PM (IST)

OOPSFeb 9, 2023 - 04:56:11 PM | Posted IP 162.1*****