» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டி இல்லை : டிடிவி தினகரன் அறிவிப்பு

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 5:11:25 PM (IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் போட்டியிடமாட்டார் என்று  அந்தக் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தி டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பொதுத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்னும் ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்.

அதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார். ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செந்தில்முருகன் வாபஸ் பெற்ற நிலையில், அமமுக வேட்பாளரும் போட்டியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஆம்Feb 8, 2023 - 12:06:24 PM | Posted IP 162.1*****

ஓட்டு விழாது தானே. ஜெயா சொத்தை ஆட்டைய போட்ட திருட்டு கும்பல்.

jollyFeb 7, 2023 - 08:15:50 PM | Posted IP 162.1*****

20rs token group

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory