» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு..!
புதன் 12, அக்டோபர் 2022 5:02:18 PM (IST)
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள் பட்டியல்
1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2023 ஞாயிற்றுக்கிழமை
2. பொங்கல் 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை
3. திருவள்ளுவர் தினம் 16.01.2023 திங்கட்கிழமை
4. உழவர் திருநாள் 17.01.2023 செவ்வாய்க்கிழமை
5. குடியரசு தினம் 26.01.2023 வியாழக்கிழமை
6. தைப்பூசம் 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை
7. தெலுங்கு வருடப் பிறப்பு 2203-2023 புதன்கிழமை
8. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள்) 01.04.2023 சனிக்கிழமை
9. மகாவீரர் ஜெயந்தி 0404.2023 செவ்வாய்க்கிழமை
10. புனித வெள்ளி 07.04.2023 வெள்ளிக்கிழமை
11. தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் 14.04.2023 வெள்ளிக்கிழமை
12. ரம்ஜான் (Idu1 Fitr) 22.04.2023 சனிக்கிழமை
13. மே தினம் 01.05.2023 திங்கட்கிழமை
14. பக்ரீத் (Idul Azha) 29.06.2023 வியாழக்கிழமை
15. மொகரம் 29.07.2023 சனிக்கிழமை
16. சுதந்திர தினம் 15.08.2023 செவ்வாய்க்கிழமை
17. கிருஷ்ண ஜெயந்தி 06.09.2023 புதன்கிழமை
18. விநாயகர் சதுர்த்தி 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை
19. மிலாதுன் நபி 28.09.2023 வியாழக்கிழமை
20. காந்தி ஜெயந்தி 02.10.2023 திங்கட்கிழமை
21. ஆயுத பூஜை 23.10.2023 திங்கட்கிழமை
22. விஜயதசமி 24.10.2023 செவ்வாய்க்கிழமை
23. தீபாவளி 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை
24. கிருஸ்துமஸ் 25.12.2023 திங்கட்கிழமை
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)











தமிழ்ச்செல்வன்Oct 13, 2022 - 10:33:13 AM | Posted IP 162.1*****