» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்கிற பெயரே கிடையாது : கமல்ஹாசன்
வியாழன் 6, அக்டோபர் 2022 12:29:16 PM (IST)
ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்கிற பெயரே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர்கள் கார்த்தி, விக்ரமுடன் இணைந்து கமல்ஹாசன் நேற்று பார்த்தார். திரைப்படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ’பொன்னியின் செல்வன் திரைப்படம் மலைப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.
அதைத் தொடர்ந்து அவரிடம் இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக மாற்ற முயல்கிறார்கள் எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், ‘ராஜராஜசோழன் காலத்தில் இந்தியாவில் இந்து மதம் என்கிற வார்த்தை கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றுதான் இருந்தது. இவற்றை ஒரே சொல்லில் இணைத்தது ஆங்கிலேயர்கள்தான்’ என்றார்.
மக்கள் கருத்து
TAMILARKALOct 7, 2022 - 03:36:42 PM | Posted IP 162.1*****
சினிமாவில் மார்க்கெட் போன நடிகர் நடிகைகள் எல்லாம் பணத்திற்காக அல்லேலூயாவாக மாறி இந்து மதத்தை குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஏற்கனேவே ஆனந்த பாபு, ராமராஜன் ஆகியோர் இந்த மாதிரி பணத்துக்காக ஊழியம் பண்ணிக்கிறார்கள். இப்போது சினிமா / அரசியலில் மார்க்கெட் போன உலக நாயகன் கமல் அந்த வேலையைத்தான் பார்க்கிறார். இவர்கள் காசுக்காக இந்து மதத்தை குறை சொல்லி கொண்டுதான் இருப்பார்கள்.
CINEMAOct 7, 2022 - 04:05:36 PM | Posted IP 162.1*****