» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அரசின் எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: வேலைவாய்ப்பு மையம் அழைப்பு

வெள்ளி 23, செப்டம்பர் 2022 5:15:57 PM (IST)

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவித்துள்ள போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள SSC (Combined Graduation Level) போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.

26.09.2022 அன்று தொடங்கப்படவிருக்கும் இவ்வகுப்புகள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையான அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல்   மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தன்னார்வ பயிலும் வட்டத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory