» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பணத்தகராறில் சுத்தியலால் தாக்கி 70 வயது மூதாட்டி கொடூர கொலை: பேரன் வெறிச்செயல்!

வியாழன் 22, செப்டம்பர் 2022 4:49:37 PM (IST)

சென்னையில் ரூ.1 லட்சம் பணத்தகராறில் பாட்டியை சுத்தியலால் அடித்துக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (70). இவர், வீட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருடைய மகள் அமுதா. இவர் திருமணமாகி தனது குடும்பத்துடன் செங்குன்றத்தை அடுத்த காந்தி நகர் நேரு தெருவில் வசித்து வருகிறார். அமுதாவின் மகன் சதீஷ்(28). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாலாட்சி, தன்னுடைய மகள் அமுதாவுக்கு புதிய வீடு கட்ட ரூ.2 லட்சம் கடனாக கொடுத்தார். அதில் ரூ.1 லட்சத்தை அமுதா திருப்பி கொடுத்து விட்டார். மீதம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. 

இது தொடர்பாக விசாலாட்சி அடிக்கடி தனது மகள் அமுதாவிடம் கேட்டு வந்தார். இதனால் தாய்-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதா, தனது மகன் சதீசுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே ரூ.1 லட்சம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், திடீரென வீட்டில் இருந்த சுத்தியலால் தனது பாட்டி விசாலாட்சி தலையில் ஓங்கி அடித்தார். 

மேலும் ஆத்திரம் அடங்காமல் பிளேடாலும் மூதாட்டியின் உடல் முழுவதும் கீறினார். வலியால் அலறிய விசாலாட்சியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மூதாட்டியை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி விசாலாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தகராறில் பாட்டியை சுத்தியலால் அடித்துக்கொன்ற பேரன் சதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory