» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மின் தடை அறிவிப்பு!

வியாழன் 16, ஜூலை 2026 12:06:58 PM (IST)

தூத்துக்குடி அய்யனார் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூலை 17) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அய்யனார் துணை மின்நிலையத்தில் 17.07.2026 வெள்ளிக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 04:00 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இதன் காரணமாக, மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹைசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர்உசேன்நகர், சுனாமிநகர், நேரு காலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம்.

மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம் மற்றும் ராமர்விளை ஆகிய மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory