» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கம்பால் தாக்கி ஒருவர் கொலை: நள்ளிரவில் பயங்கரம்!

புதன் 1, ஏப்ரல் 2026 12:16:00 PM (IST)

தூத்துக்குடியில் நள்ளிரவில் தூங்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், கூலித் தொழிலாளி ஒருவர் கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மனக்காவலன் பிள்ளை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சேவியர் (40). குடும்பத் தகராறு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி வந்த இவர், அங்குள்ள பால விநாயகர் கோவில் தெருவில் கூலி வேலை செய்து வந்தார். இரவு நேரங்களில் அங்குள்ள ஒரு பள்ளியின் முன்பு படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சேவியர் வழக்கம் போலப் பள்ளி வாசலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு படுத்துத் தூங்குவதற்காக வந்த மற்றொரு நபருக்கும், சேவியருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அந்த நபர் அருகில் இருந்த கம்பால் சேவியரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சேவியரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணி அளவில் சேவியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சேவியரைத் தாக்கியவர் தூத்துக்குடி புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் சரவணன் (40) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரவணனைப் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory