» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ரூ.3.22 கோடி திட்டப்பணிகள் : கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்!

வெள்ளி 13, மார்ச் 2026 8:23:59 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதிகளில் சுமார் ரூ.322 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கீழ்க்கண்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன: தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடை. கொடுக்காம்பாறையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம். மந்திதோப்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை. கயத்தாறு ஒன்றியம், பன்னீர்குளத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம். கனிமம் மற்றும் சுரங்கம் நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய திட்டப் பணிகளைத் கனிமொழி எம்பி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.கீதா ஜீவன், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் கோவில்பட்டி தொகுதி அடைந்து வரும் வளர்ச்சிகளைக் குறிப்பிட்டார். தூத்துக்குடி எம்.பி. அவர்களின் முயற்சியால் லிங்கம்பட்டியில் தொழிற்பேட்டை, கடலைமிட்டாய் குழுமம், விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி போன்ற நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவில்பட்டி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்ததன் மூலம், இன்று வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்கிறது. 

இது கனிமொழி அவர்களின் இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றி," என்று அவர் தெரிவித்தார். மேலும், வின்பாஸ்ட் நிறுவனம், டைடல் பார்க் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற பெருந்திட்டங்கள் மூலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் க.கருணாநிதி, கூடுதல் ஆட்சியர் இரா.ஐஸ்வர்யா, சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்படப் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory