» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!

புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)



கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன வண்ண மீன் காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் விற்பனை நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.03.2026) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். 

2022-23 ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் கீழ் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மாவட்ட அறிவியல் மையம் அருகில் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இக்காட்சியகத்தில் சுமார் 150 வகையான அலங்கார மீன்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்காட்சியகம் வரும் மார்ச் 13, 2026 முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும். இதற்கான நுழைவு கட்டண விபரம்: பெரியவர்கள்: ரூ.25, கல்லூரி மாணவர்கள்: ரூ.20, பள்ளி மாணவர்கள்: ரூ.15

மேலும், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.1.36 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயிற்சி மையம் மற்றும் மாதிரி மீன்பண்ணையும் இன்று பயன்பாட்டுக்கு வந்தது.

கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைக்காகக் காலையில் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் அரசின் திட்டத்தின்கீழ், உடையார்பட்டி சந்திப்பு வடக்கு புறவழிச்சாலை அருகில் ரூ.40.50 லட்சம் மதிப்பில் புதிய வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் (2021-2026) தொழிலாளர் நல வாரியம் மூலம் 56,782 பயனாளிகளுக்கு ரூ.70.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொக்கிரகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் குத்துவிளக்கேற்றிப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory