» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம்: மேம்பாட்டுப் பணிகள் குறித்து கனிமொழி எம்.பி. ஆய்வு
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:00:14 AM (IST)

தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் குறித்து கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆலோசனைக் குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மதன், மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா மற்றும் விமான நிலைய இயக்குநர் அனூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள், புதிய விமானச் சேவைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர், விமான நிலைய மேம்பாடு, பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் மற்றும் புதிய வழித்தடங்களில் விமானச் சேவைத் தொடங்குவது தொடர்பாக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்!
சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி, 76 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 77 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது: மேயருக்கு மாவட்ட தலைவர் கண்டனம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:47:41 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்குப் பூட்டு போட்டு மக்கள் போராட்டம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:34:55 PM (IST)

தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை: சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:07:34 PM (IST)











ஏழை மக்கள்Feb 23, 2026 - 08:37:48 AM | Posted IP 104.2*****