» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பைக்கு விரைவில் விமான சேவை : இயக்குநர் தகவல்!
புதன் 10, டிசம்பர் 2025 4:59:09 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து விரைவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு பெரிய விமானங்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குனர் அனுப் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் "தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் சென்னை பெங்களூர் விமானங்கள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக ஏற்பட்ட அசவுரியங்களால் ஒரே ஒரு விமானம் பயணம் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
அந்த விமானிகளுக்கு இண்டிகோ நிறுவனம் விமான கட்டணத்தை திருப்பி வழங்கி உள்ளது. மத்திய அரசு,மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின் படி தற்போது அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றது. தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில் இரவு நேர சேவைக்கு தயாராக உள்ளோம்.
இங்கிருந்து 180 இருக்கும் மேற்பட்ட பயணிகள் செல்லக்கூடிய A321 ரக விமானங்கள் இயக்குவதற்காக இண்டிகோ நிறுவனத்தினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இங்கு கூடுதல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்ட பின் இங்கிருந்து A321 ரக விமானங்கள் டெல்லி மும்பை ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஏப்.4, 5ல் மாபெரும் பிராண சிகிச்சை முகாம்: அனுமதி முற்றிலும் இலவசம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:39:43 PM (IST)

அரசு டவுன் பஸ் மோதி பெண் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது - திருச்செந்தூரில் சோகம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:32:04 PM (IST)

தூத்துக்குடியில் கிரேன் கயிறு அறுந்து விபத்து : ஒர்க்ஷாப் அதிபர் மகன் உயிரிழப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:18:24 PM (IST)

விளாத்திகுளத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் மார்கண்டேயன்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:12:43 PM (IST)

கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:07:50 PM (IST)

மத உரிமையைச் சிதைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:30:14 AM (IST)







