» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேங்க் ஆப் இந்தியா 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
சனி 6, செப்டம்பர் 2025 12:39:05 PM (IST)

தூத்துக்குடியில் பேங்க் ஆப் இந்தியா 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 120வது நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம் பேங்க் ஆப் இந்தியா வங்கி 3வது மைல் கிளை வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை கிளை மேலாளர் கணேஷ் பிரபாகர், எச்.எம்.எஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி வைத்தார். திருநெல்வேலி மாவட்ட எச்.எம்.எஸ் திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஷாஜகான் முகாமை துவக்கி வைத்தார்
முகாமில் இசிஜி, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். சித்தார்த், டாக்டர். ரஞ்சனி ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கினார்கள் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில், பாங்க் ஆப் இந்தியா வங்கி உதவி மேலாளர் ஸ்வாகத்குமார், பார்வதி, எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ராதா, மாவட்ட இணை செயலாளர் ஜாஹிர் ஹூசைன், மாவட்ட பொறுப்பாளர் பிரம்மநாயகம், மகளிர் அணி இணை செயலாளர்கள் சந்திரமணி, மாலதி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர்கள் மரிய நிவ்யா, விஜி நிமல், நவஸ்ரீஅனுஷ், அமுதா செல்வி, பூர்ணிகா அஸ்வினி, மாவட்ட இளைஞரணி ஹர்ஷவர்தன், செந்தில்குமார், சுப்புராஜ், பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










