» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பேரிகார்டுகளில் விளம்பர ஸ்டிக்கர் கிழிப்பு : போலீசார் மீது புகார்

சனி 6, செப்டம்பர் 2025 12:30:35 PM (IST)



தூத்துக்குடியில் டிமார்ட் அருகில் உள்ள பேரிகார்டில் இருந்த தனியார் நிறுவன விளம்பர ஸ்டிக்கரை போலீசார் கிழித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் 120க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஜவுளிக்கடை, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற தனியார் நிறுவன பங்களிப்புடன் காவல்துறை பேரிகார்டுகளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எட்டயபுரம் சாலையில் டிமார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேர்கார்டில் இருந்த தனியார் விளம்பர ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவாரம் கூறும்போது "தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் டிமார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேர்கார்டில் இருந்த தனியார் நிறவனத்தின் விளம்பர ஸ்டிக்கரை காவல்துறையினரே கிழித்துள்ளனர். தூத்துக்குடியில் நகரின் பல பகுதிகளில் பிரபலமான ஜவுளிக்கடைகள், தொழில் நிறுவனங்கள் வழங்கிய பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு ரூ.20 முதல் 30 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் ஸ்பான்சர் செய்த விளம்பர நிறுவனத்தின் பெயரை கிழித்துவிட்டு, வேறு ஒரு நிறுவனத்தின் பெயரை ஒட்ட முயல்வது சரியான முறையல்ல. இதனை காவல்துறையினரே செய்கின்றனர். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ரூரல் டிஎஸ்பி விளக்கம்

இதுகுறித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிரிடம் கேட்டபோது, "பேரிகார்டுகளில் இடம்பெற்றுள்ள விளம்பரங்களுக்கு 6மாதங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காலக்கெடு முடிந்த பின்னர் விளம்பரங்கள் அகற்றப்படுவது வழக்கம். இருப்பினும் பொது இடத்தில் வைத்து ஸ்டிக்கரை கிழித்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory