» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சந்திர கிரகணம்: கோவில்களில் பூஜை நேரம் மாற்றம்

சனி 6, செப்டம்பர் 2025 10:58:22 AM (IST)

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (செப்.7) ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.  

நாளை (செப்டம்பர் 7ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, வானில் அரிய வகை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம், சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படுகிறது.
 
இந்த நிகழ்வின் போது, சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இது நள்ளிரவு 12.23 வரை நீடிக்கும். இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால், இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் முழுமையாக கண்டு ரசிக்கலாம்.

இந்த நிலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (செப்.7) ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மாலை 5 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்ற பின்னர் நடை திருகாப்பிடப்படுகிறது. அன்றைய தினம் கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசை நுழைவு பகுதியில் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

இரவு 9:47 முதல் நள்ளிரவு 1.23 வரை சந்திர கிரகத்தை முன்னிட்டு இரவு ஏழு மணிக்கு அனைத்து கோவில்களும் நடை சாத்தப்படுகிறது மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பரிகாரங்கள் செய்யப்பட்டு கோவில்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தூத்துக்குடி சிவன் கோவிலில் இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது மீண்டும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory