» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்து ஊழியர் உயிரிழப்பு!
சனி 6, செப்டம்பர் 2025 8:50:17 AM (IST)
தூத்துக்குடி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2-ஆவது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 10 நாள்களாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதில் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், நேற்று பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, மத்திய பிரதேச மாநிலம், அனூப்பூர் பீடு பகுதியைச் சேர்ந்த ராஜூபிரசாத் (44), பீஸ்கம் சிங் ரத்தோர் (36) ஆகியோர் எதிர்பாராத விதமாக பாய்லரில் தவறி விழுந்தனர்.
இருவரையும் மீட்ட சக ஊழியர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில்,ராஜூ பிரசாத் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பீஸ்கம் சிங் ரத்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










