» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு
சனி 6, செப்டம்பர் 2025 8:41:36 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உசி. துறைமுக சதுக்கம் (வ.உ.சிதம்பரனார் சிலை) பகுதியில் நடைபெற்ற விழாவில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கலந்துகொண்டு பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ரூ.350 கோடி மதிப்பில் துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர், அமைச்சர் முன்னிலையில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம், கப்பல் சரிசெய்யும் மையம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தை முன்னிட்டு, துறைமுக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மத்திய கப்பல் துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து துறை செயலர் டி.கே.ராமச்சந்திரன், துணைச் செயலர் ராஜேஷ்குமார் சின்ஹா, வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த்குமார் புரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










