» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதல் : இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார்!

சனி 6, செப்டம்பர் 2025 8:37:17 AM (IST)



தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி வளாகத்தில் பாஜக - மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் வந்தனர். அப்போது, பாஜக பிரமுகர்கள், தங்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் வருகைக்காக காத்திருந்தனர்.

அப்போது, மக்கள் ஒற்றுமை பிரசாரப் பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியூ, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வஉசி சிலை முன்பாக தங்கள் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் பேச்சைத் தொடங்கினர்.

அப்போது, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ரசல் பேசுகையில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் தரக்குறைவாக பேசுயதாகக் கூறி, பாஜக பிரமுகர் சொக்கலிங்கம், ரசலிடம் இருந்து மைக்கை பிடுங்கினாராம். இதைத் தொடர்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், வெகுநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினரும் அங்கு இல்லாததால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் ஆனது. பின்னர், பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரும் அங்கு வந்ததால் விவாதம் மேலும் அதிகமானது. இதையடுத்து, அங்கு வந்த மத்திய பாகம் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory