» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு : 2 சிறார்கள் கைது
சனி 6, செப்டம்பர் 2025 8:32:35 AM (IST)
கோவில்பட்டியில் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறார்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓட்டுநராகவும், அப்பகுதி சந்தன மாரியம்மன் கோயில் பூசாரி ஆகவும் இருந்து வந்தார். இந்நிலையில், சண்முகா நகரில் உள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இத்தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அதில், 17 வயது சிறுவர்களான கடலையூர் சாலை சண்முகா நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த சிறுவன், கைவண்டி தொழிலாளர் காலனி, சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிறுவன் ஆகியோர் சேர்ந்து சம்பவத்தன்று இரவு மாரி செல்வத்தை மயானத்தில் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 2 சிறார்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைவண்டி தொழிலாளர் காலனியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் முருகனிடம் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாரிச்செல்வத்தின் உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










