» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வஉசி சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாணடியன் மாலை அணிவித்து மாியாதை!

சனி 6, செப்டம்பர் 2025 8:21:14 AM (IST)



தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாணடியன் மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி 154 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவ சிலைக்கு அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி த செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் ஓட்டப்பிடாரம் நினைவகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத்தலைவர் ரத்தினம், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், இணைச் செயலாளர்கள் ஜோசப், துரைபாண்டியன், முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமால்ட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், விசைப்படகு உரிமையாளர் வட்ட பிரதிநிதி சங்கம் பெவின், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, சாந்தி, ஜெ பேரவை இசக்கிமுத்து, முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் அமல தாசன் பழம், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சகாயராஜ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், மின்சார பிரிவு கருப்பசாமி, மகளிர் அணியினர் அன்னத்தாய், சாய் சுதா, சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபு தாஹிர், மற்றும் ஸ்டாலின், அந்தோனி ராஜ், தணூஸ், அந்தோனி செல்வராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மகாராஜன், சுப்புராஜ், ஆபிரகாம், முனியசாமி, வெங்கடாசலம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory