» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திறப்பு: தூத்துக்குடியில் ஒளிபரப்பு!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:01:54 PM (IST)



ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்வு தூத்துக்குடியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படத்தை திறந்து வைத்து, சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியிருக்கிறார்.

அந்நிகழ்வில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் நிகழ்த்திய உரையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் LED திரை அமைத்து ஒளிபரப்பு செய்ய மாவட்டக் கழக செயலாளர் கீதாஜீவன் ஏற்பாடு செய்திருந்தார். இன்று (05.09.2025) காலை 10:30 மணி அளவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்திய உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

அந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் சுசி. ரவீந்திரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், தலைமைக் கழக பேச்சாளர் சரவெடி சரத்பாலா, மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டக் கழக செயலாளர்கள் சிங்கராஜ், கருப்பசாமி, சுப்பையா, பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன், ஜான் சீனிவாசன், நாகேஸ்வரி, வைதேகி, சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணா தேவி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

முட்டால்Sep 5, 2025 - 05:58:06 PM | Posted IP 104.2*****

ஹி ஹி ஹீ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory