» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: ஆட்சியர் மரியாதை!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:17:14 PM (IST)



கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மரியாதை செலுத்தினார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 1872 செப்டம்பர் 5ம்தேதி ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி பிறந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய வந்து இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது வ.உ.சி. அவர்களை கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். வ.உ.சி. 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். 

டிசம்பர் 1906 ல் கப்பல்கள் வாங்குவதற்கு பம்பாய் சென்று திலகர் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார். எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ்.லாவோ ஆகிய கப்பல்கள் இயக்கப்பட்டன. ஆங்கிலேயர்களால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை. இதுபோன்ற ஒரு தேசப்பற்று மிகுந்த ஒரு மாமனிதரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை மிகப் பெருமையாக உணர்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

பின்னர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாரிசுதாரர் உ.செல்வி அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சால்வை அணிவித்து கௌரவித்தார். அதனைத்தொடர்;ந்து வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். விழாவில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory