» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுக வாயிலை முற்றுகையிட்ட மக்கள்
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:21:27 PM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தை இன்று பார்வையிட வந்த பொதுமக்களுக்கு அனுமதி வழங்காததால் துறைமுக வாயிலை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஒவ்வொரு வருடமும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளன்று (செப். 5) பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்படும். இதன் காரணமாக இன்று ஏராளமான பொதுமக்கள் துறைமுகத்தை பார்வையிட வந்தனர். ஆனால் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் வருகையை முன்னிட்டு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சிலர் துறைமுக பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் செய்து துறைமுக வாயிலை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










