» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா
வெள்ளி 5, செப்டம்பர் 2025 1:57:54 PM (IST)

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில இளைஞரணி செயலாளரும், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டினை செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










