» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:39:22 PM (IST)



தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமண்யன், செயலாளர் சுந்தரபாண்டியன், பொருளாளர் தளவாய் சைவ சித்தாந்த சபை தலைவர் சந்தானம் பிள்ளை, சுப்பிரமணியசுவாமி மகமை செயலாளர் கந்தப்பன் பிள்ளை சைவ வேளாளர் சங்க சட்ட ஆலோசகர் சண்முகசுந்தரம் பிள்ளை, வஉசி நற்பணி மன்ற நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம் கார்த்திகேயன், பாஸ்கர், சிவா, ராமசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற மாவட்ட துணை ஆட்சியர் இளங்கோ மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களும் சைவ வேளாளர் சங்க இளைஞர் அணியினரும் மற்றும் கிப்சன் புரம் இளைஞரணியினரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பழைய நகராட்சி வளர்த்தில் அமைந்துள்ள வ.உ.சியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சுதேசி பொருட்களுக்கு வித்திட்ட வ.உ.சி வழியில் அன்னிய பொருட்களை வாங்க மாட்டோம் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் மண்டபத்திற்கு வந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சி படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகளும் நற்பணி மன்றத்தினரும் செய்திருந்தனர்.

காங்கிரஸ் 


தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள் சாமி வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகம்


தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலையில் மாலை வஉசி சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு, முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகர செயலாளர் முத்துச்செல்வம், மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக்கழகம் 

தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் முன்னாள் கவுன்சிலா் ஆனந்தகுமாா் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வஉசி சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் உஷா, பெஸி, ராஜா, பாலா, கிறிஸ்துராஜா, சுதன், சந்தனராஜ், நிா்மல் உள்பட பலர் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory