» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம் : அமைச்சர் பி.கே. சேகர்பாபு துவக்கி வைத்தார்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:41:23 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஓராண்டுக்கு பிறகு நடைபெற்ற தங்கத்தேர் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு துவக்கி வைத்து, அன்னதானக் கூடம் மற்றும் புதிய அன்னதானக் கூடம் கட்டிட பணிகள், திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 3,600 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும். இப்பணியால் நிறுத்தி வைக்கப்பட்ட தங்கத்தேர் உலா மீண்டும் தொடங்கியுள்ளது. திருச்செந்தூரிலும் சிறு சிறு பணிகள் முடிவுற்ற பிறகு விரைவு தரிசனம் மற்றும் திருப்பதியை போல பிரேக் தரிசனமும் ஏற்படுத்தப்படும்.
இக்கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களை அனுப்ப அனுமதிப்பது குறித்த சாதக பாதகங்களை ஆராய்ந்து நீதிமன்றத்தில் எடுத்துக் கூறுவோம். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழி நடப்போம். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றார். பேட்டியின் போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தக்கார் அருள் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










