» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையை திட்டியதாக மாவட்ட தொடக்க கல்வி கல்வி அலுவலர் மீது புகார்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:16:06 AM (IST)
கருங்குளம் அருகே பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையை திட்டியதாக தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாளையங்கோட்டை சக்தி நகர் சுந்தரம் என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில், எனது மனைவி விஜயா தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். கடந்த 21.08.2025 மதியம் சுமார் 02:30 மணியளவில் அவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெட்சிணாமூர்த்தி பள்ளிக்கூடத்தை பார்வையிட வந்துள்ளார்.
அப்போது பள்ளிக்கூடத்தில் வைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஆசிரியை விஜயா வை நீ, வா, போ, என்று ஒருமையில் பேசியும், எனது மனைவி கழுத்தில் அணிந்து இருந்த திருமண தாலி செயினை பார்த்து ஏன் இவ்வளவு ஆடம்பரமாக செயின் போட்டு வருகிறாய், பள்ளியில் பணிபுரியும் உனக்கு இது தேவைதானா? என்றும் ஒருமையில் கடுமையாக திட்டியும் விமர்சனம் செய்தாராம்.
எனது மனைவி கடந்த 25 வருடங்களுக்கு மேல் ஆசிரியர் பணியில் பல மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார. ஆசிரியர் நல்ல மன நிலையில் இருந்தால் தான் சரியாக பாடம் கற்பிக்க இயலும் என்ற சராசரியான நிகழ்வு கூட தெரியாமல் அரசு பணியை சரிவர செய்ய விடாமல் எனது மனைவி மன உளைச்சலுக்கு தூண்டு கோலான மாவட்ட கல்வி அலுவலர் தெட்சிணாமூர்த்தி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோல் ஆசிரியை விஜயாவும், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாருக்கு புகார் மனு அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










