» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்: மேயர் உத்தரவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:46:56 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மாநகராட்சி அரங்கத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில் : செப்டம்பர் மாதம் இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும். தசரா விடுமுறை பத்து நாட்கள் நடைபெறும். ஆகையால் மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் பணிகளை விரைவாக நல்லமுறையில் முடிக்க வேண்டும்.
மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக பணிகளை நல்லமுறையில் முடிக்க வேண்டும். அதற்கான காலக்கெடுகளை ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் பின்பற்ற வேண்டும் என்று மேயர் பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன் துணைப் பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, உதவி ஆணையர் கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, லெனின், அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










