» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி. பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: கொள்ளு பேத்தி கோரிக்கை
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:34:08 AM (IST)

வ.உ.சி. பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வ.உ.சி. கொள்ளு பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.இதில் திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினருமான வழக்கறிஞர் முருகானந்தம், மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணர் கபிலாஸ் போஸ், மோனிஷா, மாரிச்செல்வம், வழக்கறிஞர்கள் நாகராஜ் பாண்டியன், சுரேஷ் மற்றும் ஜவகர், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இதையடுத்து வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சியின் வெண்கல திருவுருவ சிலை நிறுவ வேண்டும், மேலும் அவரது பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தயுள்ளதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










