» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருநெல்வேலியில் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா

வியாழன் 4, செப்டம்பர் 2025 11:53:45 AM (IST)



திருநெல்வேலியில் பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிலையமான கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. 

தமிழகத்தில் பிரபலமான ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஜவுளி மற்றும் தங்க நகை வியாபாரம் செய்து வரும் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் திருவனந்தபுரம் சாலையில் நவீன கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.


இதன் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.  ஏரல் ராமகிருஷ்ண நாடார் பாத்திரக் கடை உரிமையாளர்கள் சோமு, நாதன் ஆகியோர் புதிய கிளையை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து ஜவுளிகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி, தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி, வைரம் கேரட்டிற்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளிப் பொருள்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. இந்தச் சலுகை செப்.4 முதல் 7ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.



தரைத்தளம் மற்றும் 3 மேல் தளங்களில், ஜவுளிக் கடையுடன், தங்கநகை மாளிகையும் ஒருங்கே அமைந்துள்ளது. தரைத்தளத்தில் ஜுவல்லரி, சேலை ரகங்கள், மேட்சிங், முதல் தளத்தில் பட்டுச் சேலைகள், பேன்ஸி சேலைகள், இரண்டாம் தளத்தில் பெண் குழந்தைகள், மகளிர் ரெடிமேட்ஸ், மூன்றாம் தளத்தில் ஆண் குழந்தைகள் ரெடிமேட்ஸ், ஆண்கள் ரெடிமேட்ஸ் ரகங்கள் சர்டிங் சூட்டிங் ரகங்கள், வேஷ்டி, லுங்கி, டவல், பெட்ஷீட் ரகங்கள் இடம்பெற்றுள்ளன. 

விழா ஏற்பாடுகளை கே.சின்னத்துரை அன் கோ பங்குதாரர்கள் சி.செல்வராஜ், சி.திருமணி, கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory