» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:19:37 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டுக்கு சுகாதாரத் துறையின் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கீழ்க்கண்ட ஓராண்டு கால சான்றிதழ் படிப்புகளில் மொத்தம் 167 இடங்கள் காலியாக உள்ளன. எமர்ஜென்சி கேர் டெக்னீஷியன் - 14, ரெஸ்பிரட்டரி தெரபி டெக்னீஷியன் - 20, அனஸ்தீஷியா டெக்னீஷியன் - 27, தியேட்டர் டெக்னீஷியன் - 26, ஆர்த்தோபீடிக் டெக்னீஷியன் - 35, மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்கர்ஸ் - 45.

விண்ணப்பதாரர்கள் 31.12.2025 அன்று 17 வயதைக் கடந்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பாடத்திற்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்| மற்ற அனைத்து பாடங்களுக்கும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படியும் நடைபெறும். மேலும் 5 சதவீத இடஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்படும். விண்ணப்பப் படிவங்கள் இணையதளங்களில் 4.9.2025 முதல் இலவசமாக கிடைக்கும்.

விண்ணப்பதாரர்கள் நிரப்பிய படிவங்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்/துணை முதல்வர் அலுவலகத்தில் வருகிற 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ச்சி பட்டியல் செப்.16ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை செப்.20 முதல் தொடங்கும். மீதமுள்ள இருக்கைகளுக்கான வாக்-இன் நேரடி சேர்க்கை செப்.22 முதல் நடைபெறும். முழு சேர்க்கை செயல்முறை செப்.30-க்குள் நிறைவு பெறும். வகுப்புகள் அக்.6 முதல் ஆரம்பமாகும்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங் நடைபெறும். மாணவர்கள் மூலச் சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், வயது நிரூபணச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவக் குழு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

சேர்க்கை பெற்ற மாணவர்கள் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் பயன்கள், நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தகுதியானவர்களுக்கு வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 0461-2392698 என்ற உதவி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory