» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம் : ஆட்சியர் தகவல்!

புதன் 3, செப்டம்பர் 2025 5:43:58 PM (IST)

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைத்துத் தரப்படும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 15 குதிரை திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 60, 70 மற்றும் 80 சதவீத மானியத்தில் 2025-26 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் (Safe Firka) இருத்தல் வேண்டும். இதரப் பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புகோரி ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்பு செட்டுகளை அமைத்து உடனடி பயன்பெறலாம். மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் நிறுவப்படும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் உறுதியாக இணைத்திட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவு விவசாயிகளுக்கு 60 சதவீதமும், ஆதிராவிடர், பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 70 சதவீதமும் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 80 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் https://pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (9486480321), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (7904713925) மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் திருச்செந்தூர் உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) (9444413441) ஆகியோரைத் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory