» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செங்கல் சூளைகளுக்கு மண் பெர்மிட் அரசாணை : கனிமொழி எம்பியிடம் கோரிக்கை!

புதன் 3, செப்டம்பர் 2025 10:26:44 AM (IST)



குளங்களில் தூர்வாரும் சமயங்களில் அதிலுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கான முன்னுரிமையை செங்கல் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்பியுடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கனிமொழி எம்பியிடம் அளித்த மனுவில், "தாங்கள் எடுத்த முயற்சியினால் செங்கல் தொழிலுக்கான GST வரி குறைக்கப்படும் என்று நம்புகிறோம். அதற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு செங்கல் சூளைகளுக்கு மண் பெர்மிட் வழங்க சிறு கனிம சலுகை விதி 44 அரசாணையை இதுவரை எந்த மாவட்டத்திலும் செயல்படுத்தாமல் இருந்து வருகிறது. இதனால் செங்கல் சூளைகள் மண் இல்லாமல் சூளைகளை மூடும் அபாயம் உள்ளது. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும். 

விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாய பணிகள் நடைபெறாத காலங்களில் விவசாய கூலி ஆட்களை கொண்டு செய்யப்படும் தொழில் செங்கல் தயாரிக்கும் தொழிலாகும். எனவே புதிய அரசாணை எண்.44-ன்படி சொந்த பட்டா இடங்களில் உரிய பெர்மிட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தமிழகத்தில் விவாசயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழில் செங்கல் தொழிலாகும். கோடை காலங்களில் விவசாயம் இல்லாத காலங்களில் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது செங்கல் தொழிலாகும். நகர்ப்புற கூட்டமைப்புக்கு அத்தியாவசிய தேவை செங்கலாகும். 

செங்கல் தொழிற்சாலையில் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். செங்கல் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருள் சவுடு மற்றும் கறம்பை மண்களாகும். (சிறு கனிமம்) இம்மண்ணை பட்டா நிலங்களில் இருந்து எடுத்து எங்கள் தொழிற்சாலைகளுக்கு கொண்டு வருவதற்கு மிகவும் கடுமையான விதிமுறைகள் உள்ளது. இதை எளிமைப்படுத்தி புதியதாக சிறு கனிம சலுகை விதி 44ஐ ஏற்படுத்தப்பட்டது. 

இவ்விதிகளின்படி மண்ணெடுக்க அரசு அதிகாரிகள் மிகவும் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் பட்டா நிலங்களில் இருந்து விவசாயிகளிடம் விவசாய நிலங்களை பண்படுத்தி மண்ணை எடுத்துச் செல்வதற்காக தாங்கள் செய்த ஒப்பந்தம் காலாவதியாகி விடுகின்றது. மேலும் காலதாமதம் ஏற்படுவதால் மழைக்காலம் ஆரம்பித்து மண் எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால் நாங்கள் பட்டா நில உரிமையாளருக்கு மண்ணுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை இழக்க நேரிடுகிறது.

எனவே ஏற்கனவே உள்ள சிறு கனிம சலுகை விதி 19/1 அரசாணை எண்.105 மற்றும் 106ன் படி பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்லாமல் 9 மாத கால அளவில் மண் பெர்மிட் வழங்க துணை இயக்குநர் கனிமம் மற்றும் உதவி இயக்குனர், கனிமம் ஆகியோர்களுக்கு மண் பெர்மிட் வழங்க அதிகாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குளங்களில் தூர்வாரும் சமயங்களில் அதிலுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கான முன்னுரிமையை செங்கல் உற்பத்தியாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அந்த மண்ணிற்கான உரிமைத் தொகையை அரசாங்கத்திற்கு செலுத்துவதால் அதற்கான வருமானம் அதிகரிக்கும். தயவு செய்து தாங்கள் நலிந்து கொண்டிருக்கும் செங்கல் தொழிலை காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory