» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் மதிப்பில் 7 புதிய திட்டப் பணிகள் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

வியாழன் 15, மே 2025 10:20:59 AM (IST)



தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.16 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினையும், சத்திரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், லெவிஞ்சிபுரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், 

ஜார்ஜ் ரோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், குரூஸ்புரம் மற்றும் அமுதா நகர் பகுதிகளில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் M.M.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.27 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களையும் 

அமுதா நகர் பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் M.M.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.13.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும் என மொத்தம் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையை பயனுள்ள அறிவுப்பயணமாக மாற்றும் நோக்கத்தில், ஏனென்று கேள் எனும் தலைப்பில் நடைபெற்றுவரும் கோடை கால அறிவியல் பயிற்சி முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, வினாடி வினாப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் ஆர்.சாந்தகுமாரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஆர்.சேதுராமன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory