» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி வாலிபர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
வியாழன் 15, மே 2025 10:13:38 AM (IST)
கிருஷ்ணாபுரம் அருகில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்..
தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சாம் டேனியல் (26). இவர் வி.எம். சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேனாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருணம் ஆக வில்லை. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் பைக் மீது மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்ட சாம் டேனியல் நடு ரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சாம் டேனியல் உயிரிழந்தார். இது குறித்து சிவந்தி பட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நேற்று சாம் டேனியல் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்கள் கையில் ஒப்படைக்க போலீசார் தயாராக இருந்தனர். ஆனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும் தப்பி ஓடிய இரண்டு வாகனத்தினையும் பிடித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறிவிட்டனர்.
இதுகுறித்து சாம்டேனியலின் தந்தை செல்வராஜ் கூறும் போது, எனது மகனை திட்டமிட்டே ஒரு கும்பல் கொலை செய்தது போல தெரிகிறது. இதனால் அந்த வாகனங்களில் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். எனவே அவர்களை கண்டு பிடிக்கும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்.
இதற்கிடையில் சிவந்திபட்டி போலீசார் தீவிர விசாரணை செய்து தப்பி ஓடிய வாகனத்தினை பிடித்து விட்டோம். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று கூறினர். இன்று காலை மீண்டும் போலீசார் உறவினர்களிடம் சமரம் செய்து வருகிறார்கள். செல்வராஜ் தமிழரசி தம்பதிகளுக்கு சாம் டேனியல் ஒரே ஒரு மகன். அவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த வேளையில் நடந்த விபத்தினால் தாதன்குளம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










