» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரில் மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் : தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை!

வியாழன் 15, மே 2025 8:50:03 AM (IST)



ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைந்துள்ளது. ஆனால் தற்போது இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முனனாள் தொல்லியல் இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் ஆதிச்சநல்லூர் தீடீர் விசிட் செய்தார். இதனால் விடுபட்ட பணி துவங்குமா என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதிச்சநல்லூர் பொருநை ஆற்றங்கரையில் அமைந்த மிக முக்கிய தொல்லியல் தளம். இந்த தளத்தில் 2004 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையினர் டாக்டர் சத்திய மூர்த்தி தலைமையில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து 13 வருடங்கள் இதற்கான முடிவு வெளியிடவில்லை. இந்தமுடிவைவெளியிட வேண்டும், மீண்டும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யவேண்டும், இங்கு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று என்று 2017 ஆம் ஆண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொதுநலவழக்கு தொடர்ந்தார். 

இதன் படி ஆதிச்சநல்லூரில் கடந்த 2020&21 பட்ஜெட்டில் இந்தியாவில் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் மற்றும் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலாசீதா ராமன் அறிவித்தார். அதன் படி இங்கு அகழாய்வு செய்து சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியமாகும். கடந்த 06.08.2023 அன்று கனிமொழி எம்.பி முன்னிலையில் மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சைட் மியூசியம் அமைத்து உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இந்த சயமத்தில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அருண்ராஜ் பணியாற்றினார். இவர் பதவி உயர்வு பெற்று டெல்லி சென்று விட்டார். அதன் பிறகு இரண்டு இயக்குனர்கள் பணிபுரிந்தும் உலக தரம் வாய்நத அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் கூடுதல் சைட் மியூசியம் அமைக்க தோண்டப்பட்ட குழியை பாதுகாக்க போடப்பட்ட தற்காலிக ஓலை கொட்டகை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பாதுகாப்பு கருதி இங்கே காட்சிக்கு வைக்கப்பட்ட மண்பாண்டங்கள், ஒரு மனிதனின் முழு எலும்பு கூடு போன்றவை எடுத்து செல்லப்பட்டு விட்டது. இதனால் இதுவரை பணி செய்தும் பிரோயசனம் இல்லாமல் போய் விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.

இதற்கிடையில் மாநில தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் நடந்த அகழாய்வுவில் கிடைத்த பொருள்களை பாளையங்கோட்டை ரெட்டியார் பட்டி மலையில் பொருநை அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்தும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அங்கே மாநில அரசு மூன்று இடங்களிலும் கிடைத்த பொருளைகாட்சிப்படுத்த உள்ளது. இந்த அருங்காட்சியகம் கீழடி அருங்காட்சியகத்தினை விட மூன்று மடங்கு பெரியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்ட மத்திய அரசுவின் சைட் மியூசியம் மேம்படுத்தல் மற்றும் கூடுதல் சைட் மியூசியம் அமைக்கும் பணி, உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு தேவையான வேலை நடைபெற பணஓதுக்கீடு ஒன்றும் இல்லை என கூறப்படுகிறது.  இதற்கிடையில் நேற்று மாலையில் முன்னாள் திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனரும், ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்க காரண கர்த்தாவாகவும் விளங்கிய டாக்டர் அருண்ராஜ் ஆதிச்சநல்லூர் வருகை தந்தார். அவரை ஆதிச்சநல்லூர் சைட் பொறுப்பாளர் வெங்கடேஷ் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட தொல்லியல் ஆர்வலர்கள் உடன் வந்தனர்.

இதுகுறித்து டாக்டர் அருண்ராஜ் அவர்களிடம் கேட்ட போது, "தற்போது தாம் டெல்லியில் உள்ள தொல்லியல் கல்லூரி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். ஆதிச்சநல்லூருக்கு அலுவல் காரணமாக வரவில்லை. எனது சொந்த வேலை கா£ரணமாக தூத்துக்குடி மாவட்டம் வருகை தந்தேன். நான் பணி-புரிந்து உருவாக்கிய மியூசியம் என்பதால் பார்வையிடவே வந்தேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.

ஆனாலும் இவரது வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நிறுத்தப்பட்ட பணி தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழர் ஒருவர் ஆதிச்சநல்லூர் இயக்குனராக இருந்தவரை பணி தொய்வில்லாமல் நடந்தது. வட நாட்டுகாரர்கள் இந்த பொறுப்புக்கு வந்தவுடன் இந்த பணி கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே ஆதிச்சநல்லூர் மியூசியம் பணி பொறுப்பை தமிழர் ஒருவர் வசம் ஒப்படைக்க வேண்டும், பணி நடைபெற பணம் ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொல்லியல் ஆர்வலர்கள் விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory