» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊருணியில் குளித்தபோது நீரில் மூழ்கி லாரி டிரைவர் பலி!
வியாழன் 15, மே 2025 8:38:15 AM (IST)
வானரமுட்டியில் ஊருணியில் மூழ்கி லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தங்க மாரியப்பன் (33). லாரி டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவருக்கு ஜோதிலட்சுமி(33) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர், வானரமுட்டி-கோவில்பட்டி சாலைஓரத்தில் ஊருணியில் குளித்து விட்டு வருவதாக குடும்பத்தினருடன் கூறிவிட்டு சென்றுள்ளார்.
நீண்டநேரமாக வீட்டுக்கு அவர் திரும்பாததால், மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று இரவு அந்த ஊருணிக்கு தேடிச்சென்றனர். அப்போது அந்த ஊருணி தண்ணீரில் அவர் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தொடர்ந்து இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ ஊருணிக்கு சென்று பார்த்தனர். அங்கு பிணமாக மிதந்து கொண்டிருந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஊருணியில் குளித்து ெகாண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










