» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் நிறுத்துவதில் தகராறு: கல்லால் தாக்கி ஒருவர் கொலை - வாலிபர் கைது!
வியாழன் 15, மே 2025 8:28:41 AM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே முன்பிரோதம் காரணமாக கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி மல்லிகை நகர் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் சமுத்திரவேல் (40). கட்டிட தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னப்பன் மகன் கூலி தொழிலாளியான ஜெயராஜ் (35) என்பவருக்கும் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சமுத்திரவேல் முடுக்குமீண்டான்பட்டி அரசு பள்ளி அருகே உள்ள காட்டு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயராஜ் அவரை வழிமறித்து தாக்கினார். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஜெயராஜ் கீழே கிடந்த செங்கலை எடுத்து சமுத்திரவேலின் முகத்தில் சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த சமுத்திரவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து ஜெயராஜ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர்ர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயராஜை கைது செய்தனர். மேலும் படுகொலை குறித்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இறந்து சமுத்திரவேலுக்கு மாரீஸ்வரி (35) என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இச்சம்பவம் அந்தகிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










