» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆபாச வீடியோவை வெளியிடுவதாக ரூ.10 லட்சம், 6 பவுன் நகை பறிப்பு: இளம்பெண் பரபரப்பு புகார்
வியாழன் 15, மே 2025 8:22:04 AM (IST)
தூத்துக்குடியில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ரூ.10 லட்சம் பணம், 6 பவுன் நகையை பறித்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க காேரி இளம்பெண் போலீசாரிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சோ்ந்த 31 வயது இளம்பெண், தன்னிடம் அஜித்குமாா் என்பவா் என்னுடன், நண்பராக பழகி குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு அதை வீடியோ பதிவு செய்துள்ளாா். இதை வைத்துக்கொண்டு, சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, இதுவரை சுமாா் ரூ.10 லட்சம், 6 பவுன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டாா்.
மேலும், தொடா்ந்து அடித்து மிரட்டி வருகிறாா். கடந்த வாரம் அவா் எனது தந்தையை தாக்கியதால், அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுவரை போலீசா எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவா் தொடா்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதுடன், ஆபாச விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறாா். எனவே, இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










