» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ சங்கத்தினர் போராட்டம்
வியாழன் 15, மே 2025 8:18:11 AM (IST)

கோவில்பட்டி ஆட்டோ சங்க நிர்வாகியை வீடுபகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தை சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நேற்று சங்கத்தினரும், வானரமுட்டி சங்க தலைவர் மாரித்துரை குடும்பத்தினர், உறவினர்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ேபாது, வானரமுட்டி ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்க தலைவர் மாரித்துரையை வீடுபுகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில், வானரமுட்டி ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்க தலைவர் மாரித்துரையின் வீட்டுக்கு கடந்த 12-ந்தேதி மாலை 4 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். அவர்கள், மாரிதுரையை அவதூறாக பேசி கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாக்குதல் நடந்த மறுநாள் நாலாட்டின்புதூர் போலீசார் அவர் புகார் மனு பெற்று சென்றுள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை. தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. எனவே, மாரித்துரையை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கும், குடும்பத்தினருக்கும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










