» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலைகளில் கட்டிட கழிவுகள் கொட்டக்கூடாது : மேயர் ஜெகன் பெரியசாமி!

புதன் 14, மே 2025 5:31:40 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தங்களது வீடு பாராமாிப்பு பணிகளின் போது தேவையற்ற கட்டிட கழிவு பொருட்களை சாலைகளிலும் தெருக்களிலும் கொட்டுவதால் இடையூறுகள் ஏற்படுகிறது அதை தவிர்க்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவா் அன்னலட்சுமி வரவேற்புரையாற்றினார். 

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், கடந்த ஆண்டு ஜீலை மாதம் 28-ம் தேதி முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் 4 மண்டலங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. இந்த மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளையும் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர். குறிப்பாக பிறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம் பெயா் மாற்றம், குடிநீர் இணைப்பு, பாதாளசாக்கடை, போன்றவைகள் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  

இந்த பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பக்கிள் ஓடை 3 கிலோ மீ தூரம் இருக்கிறது. நெகிழி கழிவுகள் பயன்பாடு குறைந்துள்ளது. இன்னும் முழுமையாக அது தவிர்க்கப்பட வேண்டும் மழைகாலங்களில் இந்த நெகிழி கழிவுகளால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 20, 30, 40, 50, 60 அடி சாலைகள் இருந்து வருகிறது. சிலர் தங்களது வீடு பாராமாிப்பு பணிகளின் போது தேவையற்ற பொருட்களை சாலைகளிலும் தெருக்களிலும் கொட்டுவதால் பல்வேறு இடையூறுகள் பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

ஓவ்வொருவர் வீட்டிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். தங்களது வீட்டின் முன்புறம் புங்கை, வேம்பு, மரக்கன்று நட்டி வளர்க்கலாம். அதன் மூலம் மாசு இல்லாத நகரை உருவாக்குவது மட்டுமின்றி வெயில் மழை எது வந்தாலும் சமாளிக்கும் திறன் உள்ளது. அனைவ‌ருடைய ஓத்துழைப்போடு புறந்கர் பகுதியில் இருந்து மழை காலத்தில் வரும் தண்ணீரானது எஃசி ஐ குடோன் வழியாக வந்து பக்கிள் ஓடையில் இணைகிறது. தண்ணீரின் வேக‌த்திற்கேற்ப ரெகுலராக வருவதற்கென்று அதில் ஓரு தடுப்பு ஏற்படுத்தலாம். என்று ஆய்வு செய்து வைத்துள்ளோம். எல்லா பணிகளும் நடைபெறுவதற்கு  அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். என்று பேசினாா்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory