» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்துக்களிலிருந்து மக்களைக் காக்க வேகத் தடைகள் : சமக கோரிக்கை!
புதன் 14, மே 2025 11:21:58 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலைகளில் விபத்துக்களில் இருந்து மக்களைக் காக்க வேகத்தடைகள் அமைக்க மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் விடுத்துள்ள கோரிக்கை ; தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் காய்கனி மார்க்கெட் சிக்னல் அண்ணா சிலை அருகில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி, பெருமாள்புரம் பாரதியார் வித்யாலயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வீரமணி மகப்பேறு மருத்துவமனை, புதுக்கிராமம் பெருமாள், பிள்ளையார் கோவில் சாலை, காய்கறி மார்க்கெட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் அமைந்திருக்கக் கூடிய இடமாகும் இந்தப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடமாட்டம் அதிகளவில் இயங்கி வருகிறது.
வி.இ.ரோட்டில் கிழக்கில் இருந்து மேற்கில் வரும் வாகனங்கள் மிக வேகமாக வருவதினால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே ஜெயம் சூப்பர் மார்க்கெட் முன்பு வேகத்தடை அமைத்தால் விபத்துக்களை தடுக்க முடியும். அடுத்த மாதம் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்த பிறகு மிகப்பெரிய அளவில் மாணவர்கள் ரோட்டை கடக்க கூடிய சூழ்நிலை வரும் பொழுது மிகவும் ஆபத்தில் முடியும். ஆகவே மாநகராட்சி அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு உடனடியாக ஜெயம் சூப்பர் மார்க்கெட் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும்.
மக்கள் கருத்து
Ramanathanமே 14, 2025 - 01:01:35 PM | Posted IP 162.1*****
Bala vinayagar koil street announced as one way.lot of two wheelers and four wheelers are still using both ways. Steps to take to prevent accidents
Maniமே 14, 2025 - 12:35:38 PM | Posted IP 172.7*****
சரியான செய்தி, சிறு சிறு விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. உடனடியாக வேகத்தடை அமைக்கப்பட வேண்டியது அவசியம் சார்
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











அதே போல்மே 14, 2025 - 05:23:51 PM | Posted IP 104.2*****