» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26ல் தொடக்கம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 13, மே 2025 9:50:46 PM (IST)
தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் .இளம்பகவத் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி வட்டத்தில் 1434-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 14.05.2025 முதல் 21.05.2025 வரை நடைபெற இருந்தது. தற்போது, நிர்வாக காரணத்தினால் வருவாய் தீர்வாய தணிக்கை 26.05.2025 முதல் 30.05.2025 வரை கீழ்க்கண்ட விபரப்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.கீழத்தட்டப்பாறை குறுவட்டத்திற்கு 14.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 26.05.2025 அன்று நடைபெறும்.
கீழத்தட்டப்பாறை மற்றும் முடிவைத்தானேந்தல் குறுவட்டத்திற்கு 15.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 27.05.2025 அன்று நடைபெறும்.
முடிவைத்தானேந்தல் மற்றும் புதுக்கோட்டை குறுவட்டத்திற்கு 16.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 28.05.2025 அன்று நடைபெறும்.
புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி குறுவட்டத்திற்கு 20.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 29.05.2025 அன்று நடைபெறும்
தூத்துக்குடி வட்டத்திற்கு 21.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 30.05.2025 அன்று நடைபெறும்.
எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்கள், அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










