» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆம்னி பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 2பேர் கைது!
செவ்வாய் 13, மே 2025 9:44:16 PM (IST)
சாத்தான்குளத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூவர் மாவட்டம் கீழநெடுங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ வேலு மகன் சூர்யபாபு (36). இவர் சாத்தான்குளத்தில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் ஓட்டுநராக உள்ளார். இவரது புகாரின் பேரில் அதே பேருந்தில் ஓட்டுநராக இருந்த கஜேந்திரன், உதவியாளர் சுரேஷ் ஆகியோரை பேருந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வேலையை வீட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன், மற்றும் சுரேஷ், நேற்று சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்து புறப்பட்டபோது வழிமறித்து ஓட்டுநர் சூரியபாபுவை அவதூறாக பேசி அவரை தாக்கினர் மேலும் அவர் அணிதிருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி மாயமானது. இதில் பலத்த காயமிடைந்த சூர்யபாபு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர், முருகேசன் வழக்குபதிந்து கஜேந்திரன், சுரேஷ் ஆகியோரை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










