» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எரல் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தில் நிரந்தர தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை!

செவ்வாய் 13, மே 2025 5:18:29 PM (IST)



கனமழை வெள்ளத்தில் சேதமடைந்த எரல் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தில் நிரந்தர தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நீர் நிலைகள் பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட நீர் நிலைகள் பாதுகாப்பு குழு தலைவரும், சமூக ஆர்வலரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தமிழக முதல்வர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனழை வெள்ளத்தினால் சேதமடைந்த எரல் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தின் தடுப்பு கம்பிகள் தற்போது 16 மாதமாகியும் நிரந்தர தடுப்பு கம்பிகள் அமைக்கவில்லை.

ஏரல் தாமிரபரணி ஆற்றின் புதிய பாலம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த அதிக கனமழையால் பாலம் உடைந்து உருக்குலைந்து இருக்கிறது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் இதனால் தடை செய்யப்பட்ட போக்குவரத்து தரைமட்ட பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்தித்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளத்தில் பழைய பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்பு கம்பிகள் முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. 

மேலும் புதிய பலத்தில் போக்குவரத்து தடையால் ஏரல் குரும்பூர் சாலையில் இரு வழி வாகனங்கள் அனைத்தும் சிறிய பழைய பாலத்தின் வழியே செல்கிறது. இதனால் எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகள் ஆபத்தை எதிர்நோக்கி வாகங்களை இயக்கின்றனர். மேலும் இதனால் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி தொடர்ந்து நிலவுகிறது. 

இதனால் பாதசாரிகளும் பள்ளி செல்லும், குழந்தைகளும், பெண்களும், பொதுமக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே பல உயிர் சேதங்களை தடுக்கின்ற வகையில் ஏரல் தாமிரபரணி ஆற்று பழைய பாலத்தில் இருபுறங்களிலும் நிரந்தர தடுப்பு சுவர் கம்பிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

தைக்கா.முஹம்மது சுல்தான்.காயல்பட்டிணம்.கைபேசி : 98400 49213.மே 14, 2025 - 10:23:45 PM | Posted IP 172.7*****

வெகுஜன நல்கருதி தங்களது சேவை பணி அனைத்திற்கும் நன்றிகள் நல்வாழ்த்துக்கள் பல!

Thaika mohmed sultan. kayalpatnam. Cell:9840049213.மே 14, 2025 - 10:12:49 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி-முள்ளக்காடு "சாண்டி பொறியியல் கல்லூரி" சாலை வழியாக தூத்துக்குடி விமானம் நிலையம் சென்று வர வேண்டி புதிய மாறறு வழி பாதையை (ByePass Road)அரசு சார்பாக துரிதமான ஆய்வு பணிகளை மேற்கொண்டால் தென் பகுதி தூத்துக்குடி மாவட்டத்தின் சகலவித மக்கள் பயன்கள் அதிகம் பெறுவர்.நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory